எனது வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்... அன்புடன் ரவி

Tuesday, April 27, 2010

நவீன வேளாண்மையா? இயற்கை வேளாண்மையா? - விஜய் தொலைக்கட்சியின் நீயா? நானா? நிகழ்ச்சித்தொகுப்பு

வாரம்தோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி நீயா? நானா? இந்த வாரந்திர நிகழ்ச்சியில் கடந்த 25.04.2010 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நவீன வேளாண்மையை ஆதரிப்பவர்களுக்கும் எதிப்பவர்களுக்கும் இடையே நடந்த பரபரப்பான கருத்து விவாதங்களின் தொகுப்பு.

பகுதி:1



பகுதி-2



பகுதி-3



பகுதி-4



பகுதி-5



பகுதி-6



பகுதி-7



பகுதி-8



பகுதி-9




இந்த வலைப்பதிவைப்பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை விட்டுச்செல்லவும்

இந்த பதிவு பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

Sunday, April 25, 2010

விவசாயத்துறையில் நானோ தொழில்நுட்பம்

ருங்காலத்தில் மிகப்பெரும் ஒரு புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கும் ஒரு அதி உன்னத தொழில்நுட்பம்தான் நானோ தொழில்நுட்பம் என்ற குறுந்தொழில்நுட்பம். சிறிய பெரிய என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து தொழிற்துறைகளுக்குமான ஒரு சிறந்த தொழில்நுட்பம் என்று விஞ்ஞானிகளால் போற்றப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த தொழில்நுட்பம் இன்னும் பெரும்பாலான நாடுகளில் சோதனைச்சாலைகளில் வளர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் பற்றி நாம் அனைவரும் குறிப்பாக வளர்ந்து வரும் இளைய தலைமுறை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இதன் அவசியம் உணர்ந்துதான் பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ”இந்த புதிய
தொழில்நுட்பம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாவிட்டால் சதா மெகா சீரியலில்
அரை மயக்க நிலையிலும்,நடிகைகளின் இடுப்பளவிலும் தான் ஆழ்ந்து
இருப்பீர்கள்,உலகம் நம்மை புறக்கணித்துவிட்டு எங்கோ ஓடிப்போய் விடும்" என்று கூறுகிறார். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை வரும் காலம் நிச்சயம் பதில் சொல்லும். 

சரி இந்த நானோ டெக்னாலஜி என்பது என்ன?

நானோ+ டெக்னாலஜி

முதலில் நானோ என்பது பற்றி பார்ப்போம்
நாம் பொதுவாக எந்த பொருளையும் நீள அகலத்தால் அளப்பதற்கு மில்லி மீட்டர், சென்டிமீட்டர், மீட்டர் என்ற அளவு முறையை நாம் பயன்படுத்துகிறோம்.

இன்னும் கொஞ்சம் விரிவாக பார்த்தோமானால் ஒரு மீட்டரில் நூறில் ஒரு பங்கு ஒரு சென்டிமீட்டர் ஆகும். அதேபோல் ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒரு மில்லிமீட்டர். 
இதேபோல் ஒருமீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு தான் நானோ மீட்டர் எனப்படுகிறது.
இந்த மிக மிக சிறிய அளவை நம்மால் சாதரணமாக பார்க்கமுடியாது. எனவே இந்த தொழில்நுட்பங்களை கையாள இதற்கென வடிவமைக்கப்பட்ட பல்வேறு நுண்ணோக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு பொருளின் அடிப்படை அலகு என்று வர்ணிக்கப்படுவது அணு. அந்த அணு அளவில் கையாளாப்படும் இந்த நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படை செயல் ஆதாரம், அணு அளவிலேயே எந்த ஒரு செயலையும் செய்யமுடியும் மற்றும் அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்பதுதான். 

ஒரு பொருளின் அமைப்பும் செயல்பாடுகளும் அதன் அணு கட்டமைப்பை பொருத்துதான் உள்ளது எனவே அணுக்கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருளின் செயல்பாடுகளை மாற்றியமைக்கலாம். இதை அடிப்படையாக கொண்டே இயற்கை பல்வேறு புதுமைகளை தினந்தோறும் நிகழ்த்திக்கொண்டுள்ளது. உதாரணமாக மண்ணில் புதையுண்ட கரி வைரமாக மாறுகிறது. கடலில் உள்ள நீர் மேகமாக மாறுகிறது, இதுபோல் பல இயற்கையின் பல செயல்களைக்கூறலாம். இதே செயல்களை மனித இனமும் செயற்கையாக நன்மை தரும் விதமாக செய்து கொள்ள முடியும் என்ற மனித ஆராய்ச்சியின் வெளிப்பாடுதான் இந்த நானோ தொழில்நுட்பம்.
ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு தொழில்துறைகளில் பல ஆச்சர்யமான கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன எடுத்துக்காட்டாக மின்னணு சாதன துறையில் குறைவான மின்சக்தியை பயன் படுத்தி சிறப்பாக இயங்க்கூடிய சாதனங்களும், எடைகுறைந்த அதேசமயம் பல மடங்கு உறுதியான வாகன உதிரிபாகங்களும், எளிதில் உடையாத டென்னீஸ் பந்துகளும் மக்களின் பார்வைக்கு வந்துவிட்டன.

இந்த வரிசையில் வருங்காலத்தில் பெரும் புரட்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் இன்னுமொரு துறை உயிரியல் துறை. இதற்கு முன்னுதாரமாக இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி மருத்துவத்துறையில் கத்தியின்றி ரத்தமின்றி செய்யக்கூடிய அறுவை சிகிச்சைகள் வந்துவிட்டன. இதன் தொடர்ச்சியாக இப்போது வேளாண்மைத்துறையிலும் இந்த தொழில்நுட்பம் காலூன்ற ஆரம்பித்து விட்டது.

விவசாயத்துறையில் குறிப்பாக இடுபொருள் மேலாண்மை, களை மேலாண்மை, நீர்ப்பாசன மேலாண்மை மற்றும் மண் மேலாண்மை போன்ற பல்வேறு பிரிவுகளில் துறை வாரியாக நானோ தொழில்நுட்பத்தை பயன் படுத்துவது குறித்த ஆராய்சிகள் பன்னாட்டளவில் தொடங்கப்பட்டு விட்டன. இத்தைகய ஆராய்ச்சிகளின் பயனாக ஆர்கன்சா பல்கலைக்கழகம் (University of Arkansas) சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தி காட்டியுள்ளனர். அது கார்பன் நானோ துகள்களை பயன்படுத்தி தக்காளி பயிரில் செய்யப்பட்ட ஒர் சோதனை. அந்த சோதனை முடிவுகளின் படி தக்காளி விதைகளை கார்பன் நுண்குழாய்களுடன் சேர்ந்து சிறிதளவு மண் மற்றும் பாறை துகள்கள் உட் சேர்த்து விதைத்து சோதனை செய்தபோது அது விதையின் உயிரியல் ரீதியான செயற்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதை பதிவுசெய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கார்பன் நுண்குழாயுடன் சேர்க்கப்பட்ட விதைகள் சாதாரண நிலையைவிட இரு மடங்கு வேகமாக முளைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சாதாரணமாக 38.9 சதவீதமான நீரை வித்துக்கள் முளைக்கும் பொது உள்ளே உறிஞ்சுவதாகவும் ஆனால் காபன் சிறு குழாய்கள் கலந்து முளைக்கவிடப்பட்ட விதைகள் 57.6 வீத நீதை உறிஞ்சுவதாகவும் கணக்கிட்டுள்ளனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும், விவசாயத்தில் நனோ தொழில் நுட்டபத்தினை புகுத்திவிட முயன்றுவரும் ஆராய்ச்சியாளர்கள் இதன் மூலம் புதிய உத்வேகம் பெற்றுள்ளனர்.
இதுபோன்ற வெற்றிகரமான ஆரம்பகால சோதனை முடிவுகள் வரும் காலத்தில் நனோதொழில் நுட்பம் சார்ந்த விவசாய முறைகளில் ஏற்படப்போகும் புரட்சிகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியவை பொறுத்த வரை நானோ தொழில்நுட்பத்தின் முன்னோடி என்று நமது முன்னால் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களை கூறலாம்
காரணம் அப்துல் கலாம் அவர்கள் பெரும்பாலான அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் நானோ தொழில்நுட்பம் பற்றி ஒருசில வார்த்தைகளாவது சொல்ல தவறுவது இல்லை. நானோ தொழில்நுட்பம் மூலம் சூரிய ஒளி சக்த்தியின் பயன்பாட்டை 45 சதவீத அளவிற்கு உயர்த்தினால் இந்தியாவின் எரிசக்தி தேவையின் பெரும்பகுதி நிறைவேற்றுப்பட்டுவிடும்,எனவே நானோ தொழில்நுட்பத்திற்கு அதிக அளவில் நிதியை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

Saturday, April 3, 2010

உலக வாழ்வின் அடிப்படை ஆதாரம் - விவசாயம்

இந்த பெருமைக்குரிய உலகில் நாடோடித்தனமாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த மனிதகுலத்திற்கு ஒரு நிலையானவாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள பெரிதும் துணை நின்றது விவசாயம் எனும் உழவுத்தொழில்.  அத்தகைய நிலைபெற்ற வாழ்க்கைக்கு பிறகுதான் மனிதகுலம் பல்வேறு நாகரிக வளர்ச்சிகளை கண்டது. அதன் பின்பும் மனிதனால் செய்யப்பட்ட பல்வேறு தொழில்களில் முதன்மையானதாகவும் மனிதகுலத்திற்குஅத்தியாவசியமானதாகவும் விளங்கியது உழவுத்தொழில்தான். இதன்பெருமையை உணர்ந்துதான் வள்ளுவப் பெருந்தகை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று  உழவுத்தொழிலுக்கு சிறப்பு செய்ததோடு தான் இயற்றிய திருக்குறளில் உழவு (திருக்குறள் அதிகாரம்: 104)” எனும் தனி அதிகாரம் அமைத்து விவசாயம் பற்றிய பெருமைகளையும் முக்கியதுவத்தையும் சொல்லிச்சென்றிருக்கிறார்.
  

நாகரிகம் மேம்பட்டு  மனித குலம் பல்வேறு வளர்ச்சி நிலைகளை கண்ட காலகட்டத்திலும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பழங்காலந்தொட்டே வணக்கத்திற்குறிய தொழிலாக விவசாயம் இருந்து வந்துள்ளது என்பதை பல்வேறு வரலாற்று சான்றுகளும் இலக்கிய பாடல்களும் எடுத்து காட்டுகின்றன. மனித வாழ்க்கையில் உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகளுள் முதலாவதாக இருப்பது உணவு எனவே அந்த உணவு உற்பத்திக்கு மூலதனமாக விளங்கும் வேளாண் தொழிலை போற்றி வணங்குவது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பதில் சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

இந்த பதிவு பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

Friday, April 2, 2010

அறிமுக பதிவு

அனைவருக்கும் அன்புகலந்த இனிய வணக்கங்கள்...

நீண்ட காலமாக இணையத்தின் வாயிலாக பல வலைப்பதிவுகளின் வாசகனாக வாழ்ந்த எனக்கு தன்னையும் வலைப்பதிவர்களின் வரிசையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று என் உள்மனது கொண்டிருந்த தீராத ஆவலை வேளாண்மை தொடர்பான இந்த வலைப்பதிவை ஆரம்பிப்பதின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்று எண்ணி இந்த அறிமுகத்தை பதிவு செய்திருக்கிறேன்.

இந்த வலைப்பதிவுன் மூலம் வேளாண்மை தொடர்பான செய்திகளும், கருத்துக்களும் பதிவு செய்யப்படும். இது வெற்றியடைய உங்களின் தொடர்ந்த ஆதரவையும், ஊக்குவிப்பையும் எதிர்பார்க்கும்...

ரவி..

தொடர்புக்கு

மின்னஞ்சல்: ravi.agri@gmail.com

இந்த பதிவு பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

Back to top